மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை!

மிருசுவில் பகுதியில் 2000ம் ஆண்டு தமிழர்கள் எட்டுப் பேரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுனில் ரத்னாயக்க பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளார் என்று செய்திகள் வெளியான போது அதனை ஊடகப்பிரிவு மறுத்திருந்தது. இந்நிலையில் அவர் பொது மன்னிப்பின் விடுதலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் தமிழ் ஊடகப் பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது குறித்த மரண தண்டனை கைதி விடுதலை செய்யப்படவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!