சட்டவிரோதமாக விலகிய படையினருக்கு 7 நாள் பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு!

சட்டவிரோதமாக முப்படையில் இருந்து விலகிச்சென்ற இராணுவத்தினருக்கு ஏழு நாள் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போரில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமைகளை முன்னெடுத்த இராணுவத்தினர் போரின் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக இராணுவத்தை விட்டு விலகினர். இவ்வாறான காரணத்தை கருத்திற்கொண்டே இந்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக கேந்திர நிலையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் மீண்டும் இராணுவத்தில் இணைந்து சேவையை முன்னெடுக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் 05.02.2020 திகதி முதல் இந்த எழு நாள் பொது மன்னிப்பு காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

30.09.2019 ஆம் திகதிக்கு முன்னர் சேவையில் இருந்து விலகிய இராணுவத்தினருக்கு மாத்திரம் இந்த பொது மன்னிப்பு வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் ஊடக கேந்திர நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!