தலையில் 3 தோட்டாக்களுடன் 7 கி.மீ. காரை ஓட்டிய பெண்!

பஞ்சாப் மாநிலத்தில் தலையில் பாய்ந்த 3 துப்பாக்கித் தோட்டாக்களுடன் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் காரை ஓட்டி வந்த பெண் ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்பெண்ணுக்கும் அவர் சகோதரருக்கும் இடையே நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சகோதரனின் மகன் சுமித் கவுர் என்ற பெண்ணையும் 65 வயதான அப்பெண்ணின் தாயையும் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

சுமித் கவுர் காரை எடுத்து முக்தசர் காவல்நிலையம் நோக்கி சென்றார் இரண்டு பெண்களும் தற்போது மருத்துவமனையில் தோட்டாக்கள் அகற்றப்பட்டு ஆபத்தான கட்டத்தை விட்டு நீங்கியுள்ளனர். போலீசார் அப்பெண்ணின் சகோதரர் ஹரிந்தர் சிங்கையும் துப்பாக்கியால் சுட்ட ஹரிந்தரின் மகனையும் தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!