“யாழில் உணவகம், விடுதி அமைக்கும் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது”

யாழ். பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உணவகம் மற்றும் விடுதி அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எமக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ். மாநகர முதல்வரின பிரத்தியோக இணைப்பாளர் ஜனாப் ஏ.ஜி.நெளபரின் அழைப்பினை ஏற்று உணவம் மற்றும் விடுதி அமைக்கும் நடவடிக்கைகளை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்,

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உணவகம் மற்றும் விடுதி அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எமக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைகளை அரசியல் உயர் மட்டங்களுடன் கலந்துரையாடி முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிப்போம். இல்லையெனில் இதனை நிறுத்துவதற்கு நீதிமன்றத்தினூடாக சட்டரீதியன நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இதேவேளை குறித்த உணவகம் மற்றும் விடுதி அமைக்கப்படுவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை கொழும்பில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர் ஒருவரே முன்னெடுத்து வருவதாகவும் 20 க்கும் மேற்பட்டோர் பிரதேச மக்களை அச்சுறுத்துவம் வகையில் வாகனங்களை மேற்படி காணிக்குள் நிறுத்தி வைத்திருப்பதாகவும் அடிக்கடி பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் வந்து செல்வதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!