மாங்கல்யம் தந்துனானேன’…’மந்திரங்கள் ஓத மசூதியில் நடந்த திருமணம்.. மெய்சிலிர்க்க வைத்த மனிதர்கள்!

மந்திரங்கள் ஓத மசூதியில் இந்து தம்பதியரின் திருமணம் நடைபெற்றுள்ள சம்பவம், பலரையும் மெய்சிலிர்க்க செய்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழை அருகே செருவல்லி பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் அஞ்சு. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்த்த இவருக்கு, அவரது தாயார் திருமணம் செய்து வைக்க வரங்களை தேட தொடங்கியுள்ளார். ஆனால் பண வசதி இல்லாத காரணத்தினால் அவரால் பெண்ணின் திருமணத்தை நடந்த முடியவில்லை. இந்நிலையில் அவர் வசிக்கும் பகுதியின் அருகே முஸ்லிம் ஜமாத் மசூதி ஒன்று உள்ளது. அங்கிருக்கும் செருவல்லி ஜமாத் கமிட்டியிடம் சென்ற அஞ்சுவின் தாயார், தனது மகளின் திருமணத்தை நடத்தி வைக்குமாறு கேட்டுள்ளார்.

அதனை பெருந்தன்மையுடன் மசூதி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் மணப்பெண் அஞ்சு, மணமகன் சரத் இருவருமே இந்துக்கள் தான். இந்நிலையில் திருமணத்தை வெகுசிறப்பாக நடத்திய மசூதி நிர்வாகம், மணமக்களுக்கு 10 பவுன் தங்க நகைகளும், ரூ.2 லட்சம் ரொக்கமும் பரிசாக கொடுத்தது.

திருமணத்திற்காக செருவல்லி முஸ்லிம் ஜமாத் மசூதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குத்துவிளக்கு ஏற்றப்பட்டு புரோகிதர் முன்னிலையில், மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். இந்து மத சடங்குகளுடன் திருமணம் நடந்தேறியது.

இந்த திருமணத்தில் இந்து-முஸ்லிம் இருதரப்பினரும் திருமணத்தில் கலந்து கொண்டனர். மசூதி வளாகத்திலேயே சைவ விருந்து நடைபெற்றது. சுமார் ஆயிரம் பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் தற்போது பலரையும் நெகிழ செய்துள்ளது. இதற்கிடையே கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் புதுமண தம்பதியருக்கு வாழ்த்துகள் தெரித்துள்ளார்.

மேலும் கேரள மாநிலம் மத நல்லிணக்கத்துக்கு எப்போதும் உதாரணமாக திகழ்வதாகவும், மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் நேரத்தில் இந்த திருமணம் நடந்துள்ளது. மதங்களை கடந்து கேரளா எப்போதும் ஒற்றுமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!