இறுதி முயற்சியாக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய நிர்பயா கற்பழிப்பு குற்றவாளி!

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் நான்கு பேருக்கு வரும் பிப்ரவரி 1-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இவர்களுக்கு கடந்த மாதம் 22-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில், தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்கும் கடைசி முயற்சியாக 4 பேரில் ஒருவரான முகேஷ் குமார் சிங் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். மற்ற 3 பேரும் கருணை மனு தாக்கல் செய்யவில்லை. முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை தொடர்ந்து வரும் 1-ந் தேதி காலை 6 மணிக்கு மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் அரோரோ உத்தரவிட்டார்.

இந்நிலையில் குற்றவாளிகள் சார்பாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளான வினய், பவன், அக்‌ஷய் சார்பாக வழக்கறிஞர் ஏ.பி.சிங் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சீராய்வு, கருணை மனுக்களுக்கு தேவையான ஆவணங்களை திகார் சிறை நிர்வாகம் தங்களுக்கு வழங்கவில்லை” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!