மிஸ் மெக்சிகோ அழகி பட்டத்தை வெல்வதே லட்சியம் – மாற்றுத்திறனாளி உருக்கம்!

மிஸ் மெக்சிகோ அழகி பட்டத்தை வெல்வதை குறிக்கோளாகக் கொண்டு, அந்நாட்டைச் சேர்ந்த 2 கைகளும் இல்லாத மாடல் அழகி ஒருவர் செயல்பட்டு வருகிறார். 24 வயதாகும் அவரது பெயர் அனா கேப்ரியலா மொலினா ஆகும் (Ana Gabriela Molina). 2 கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளியான அவர், சாப்பிடுவது, எழுதுவது, செல்போன்களில் குறுந்தகவல் அனுப்புவது ஆகிய அனைத்து செயல்களையும் தனது 2 கால்களை கொண்டு செய்து வருகிறார்.

மிஸ் நான்சிடால் அழகி போட்டியில் கலந்து கொண்டு அழகி பட்டத்தையும் அவர் வென்றுள்ளார். இதையடுத்து மிஸ் மெக்சிகோ அழகி போட்டியில் பட்டம் வெல்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!