அரசாங்கத்திற்கு தோட்டத்தை ஒப்படைக்குமாறு கோரினால் அதனை வெறுமனே ஒப்படைக்கமுடியாது- ரொஷான் இராஜதுறை தெரிவிப்பு!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ருபாய் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் எம்மை அழைத்து பேச்சிவார்தை நடாத்தியுள்ளார்கள் இருந்தாலும் நாம் இன்னும் அரசாங்கத்திற்கு இன்னும் எவ்வித அறிவித்தல்களையும் நாம் வழங்க வில்லை ஆனால் இருந்த போதிலும் ஒரு சிலர் கூறுகிறார்கள் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கமுடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கூறுகிறார்கள் தோட்டங்களை வெறுமனே ஒப்படைக்க முடியாது ஏன் என்றால் அதற்கு சில சட்டத்திட்டங்கள் உள்ளன என ஹேலிஸ் நிருவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொசான் இராஜதுறை தெரிவித்தார் 25.01.2020.சனிகிழமை நானுஒயா ரதல்ல விளையாட்டு மைதானத்தில் கொழுந்து பறிக்கும் போட்டியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது ஊடகவியலாளர்கள் கேல்வி எழுப்பிய போதே அவர் இதனை தெரிவித்தார்

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஹேலிஸ் நிருவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் ராஜதுறை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாங்கள் சம்பளத்தை அதிகரித்து வழங்க நாம் விருப்பம் இல்லாமல் இல்லை எமக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் சமபளத்தை அதிகரிக்கபட வேண்டு என்ற உணர்வு உள்ளது தேயிலையின் விலை கடந்த இண்டு முன்பு கானப்பட்ட தேயிலை விலை தற்பொழுது இல்லை நூறு ருபா விலை குறைவடைந்துள்ளது நூற்றுக்கு நாற்பது வீதம் சம்பளம் அதிகரிக்கின்ற போது எங்களால் வழங்கமுடியாத சூழ்நிலையே கானப்படுகிறது .

நாட்டின் ஜனாதிபதி ஆயிரம் ருபா வழங்குமாறு கோறியுள்ளார் ஆனால் நாங்கள் கோறியுள்ளோம் ஆயிரம் எந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பில் ஒரு முறைமையை நாம் கோறியுள்ளோம் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு யாரும் எம்மிடம் கோறவில்லை அரசாங்கமும் 25தோட்டபராமரித்து வந்துள்ளது.

எமது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1600மற்றும் 1700ருபா சம்பளம் பெருவதற்கான சந்தர்பம் காணப்படுகிறது ஆயிரம் ருபா என்பது ஒரு சிறிய தொகை தற்பொழுது கூட மேலதிகமாக கொழுந்துகளை பறித்து இலாபத்தினை தொழிலாளர்கள் பெருகிறார்கள் நாம் தற்பொழுது 2020ம் வருடத்தில் இருக்கிறோம் ஆகையால் தான் நான் கூறுகிறோம் புதிய ஒரு முறைமையை கொண்டு வருமாறு கோறுகிறோம் தோட்டங்கள் இன்று நஷ்டத்தில் இயங்குறது அதன் நாங்கள் கானணம் அல்ல அதற்கு காரனம் தேயிலையின் விலை விழ்ச்சியடைந்தமையினாலே.

தொழிலாளர்கலால் பறிக்கபடுகின்ற தேயிலையின் முலம் தொழிலாளர்களின் சம்பளத்திற்கு நூற்றுக்கு ஆறுத்து ஏழு சதவீதம் ஒதுக்கபட வேண்டும் பாராமரிபாளர்களுக்கும் நூற்றுக்கு ஒன்பது வீதம் ஒதுக்கபட வேண்டும் நாங்கள் ஒன்றும் கோப்பிகடை கொண்டு நடத்தவில்லை ஒவ்வருவரும் ஒவ்வொன்றை பேசுவார்கள் தோட்டங்களை இலாபத்தின் ஊடாக கொண்டு செல்ல அவர்கள் கூறுவது நடத்த வேண்டுமானால் முன்வந்து பேசுபவர்களை தோட்டங்களை நடாத்தி பார்க்கலாம் என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!