கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலி – 50% விலைக்கழிவில் விமான பயணச் சீட்டுக்கள் வழங்க முடிவு!

சீனாவில் கல்விகற்கும் இலங்கை மாணவர்கள் சீனாவிலிருந்து நாடு திரும்புகின்றனர் என பீய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த 21 மாணவர்கள் கொண்ட குழு இன்று பிற்பகல் இலங்கைக்கு புறப்பட்டுள்ளது என சீனாவில் உள்ள இலங்கை தூதரகத்தை மேற்கோள் காட்டி வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. ஜனாதிபதியின் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை எயார்லைன்ஸ் ஆகியவை இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

சிச்சுவான் மற்றும் சீனாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை மாணவர்களும் மேலும் பிற பகுதியில் உள்ள 30 மாணவர்களும் பேருந்து மூலம் விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டள்ளது.

இதேவேளை பயண தடை விதிக்கப்பட்டுள்ள வுஹானில் உள்ள இலங்கை மாணவர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 50% தள்ளுபடி விகிதத்தில் மாணவர்களுக்கு விமான பயன்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!