யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் பயணித்த சாரதி: பேருந்தை இடைநிறுத்திய விசேட அதிரடிப் படையினர்!

யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி மதுபோதையில் பயணித்ததை அடுத்து இராணுவம் மற்றும் பொலிஸ் , பொலிஸ், விசேட அதிரடிப் படையினரால் பேரூந்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை ஏழு முப்பது மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட அக்கரைப்பற்று – யாழ்ப்பாணம் பேருந்து யாழ்ப்பாணம் – நாவற்குழி வரவேற்பு வளைவு பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினரால் சோதனையிட்டபோது பேருந்தின் சாரதி மதுபோதையில் காணப்பட்டதோடு அவரது ஆசனத்துக்கு அருகாமையில் பியர் மற்றும் மதுபான போத்தல்களும் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து உடனடியாக பேருந்தின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பொலிஸார் கைப்பற்றியதோடு பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் இறக்கப்பட்டு வேறு ஒரு பேருந்தில் குறித்த பயணிகளை ஏற்றி அனுப்புமாறு யாழ்ப்பாணம் சாலைக்கு தெரியப்படுத்தி இருந்தனர். இதன் மூலம் பலரது பயணம் செய்த பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையின்போது யாழ்ப்பாணம் 512 பிரிகேட் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!