செயற்குழு நீக்கம் ; எமக்கு அறிவிப்பு விடுக்கவில்லை – அஜித் பெரேரா

நாடளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மற்றும் தம்மை நீக்கியமை தொடர்பில் எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஒழுக்க விதிகளுக்கான கூட்டுப்பொறுப்பை மீறிய குற்றச்சாட்டில் சரத் பொன்சேகா , அஜித் பெரேரா, பக்கீர் மக்கார் ஆகியோர் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே அஜித் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!