சீன பயணிகளுக்கு சூடான உணவு, போர்வை, புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது – தைவான் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக சீனா செல்லும் பயணிகளுக்கு சூடான உணவு, போர்வை, புத்தகங்கள் போன்றவை வழங்கப்பட மாட்டாது என, தைவானை சேர்ந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது. தனிமனித தொடர்புகளை தடுப்பதன் மூலம் வைரஸ் பரவுதலை தடுக்கலாம் என்ற முயற்சியில் சீன ஏர்லைன்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது. அதற்காக இனி தங்களுக்கான குடிநீர் பாட்டில்களை பயணிகளே கொண்டு வரவேண்டும் என அறிவித்துள்ளது.

இதன் வாயிலாக வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தியவர்கள் பொருளை மற்றவர் பயன்படுத்துவது தடுக்கப்படும். மேலும், இருக்கையின் பின்புறத்தில் முதலுதவி பையும், பாதுகாப்பு வழிமுறைகளை வலியுறுத்தும் அட்டை மட்டுமே இருக்கும் எனவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!