ரணில் தான் வேட்பாளர், கோத்தாவைப் பற்றி கவலைப்படவில்லை! – என்கிறார் ஐதேக செயலர்

ஐதேகவின் தலை​வர் ரணில் விக்கிரமசிங்கவையே 2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறக்குவோம் என்றும், கோத்தாபய ராஜபக்சவை சவாலாக கருதவில்லை என்றும் தெரிவித்துள்ளார் ஐதேகவின் செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம். ஐ.தே.க ஊடக மையத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ஐக்கிய தேசிய கட்சி திருடர்களை பாதுகாப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், எமக்கு அவ்வாறான அவசியம் கிடையாது. அதற்காக, திருடர்கள் என்று நிருபிக்கப்படாதவர்களை திருடர்கள் என்று முத்திரை குத்துவதற்கும் நாம் தயாரில்லை. ஐ.தே.கவின் தலைவரையே 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் போது எதிரணி வேட்பாளராக களமிறங்க போவதாக கூறப்படும் கோத்தாபய ராஜபக்சவை நாம் சவால் என்ற கருதவில்லை. 2015ஆம் ஆண்டில் பொதுவேட்பாளருக்கு எதிராக களமிறங்கிய வேட்பாளரையும் நாம் சவாலாக கருதவில்லை என்று கூறினோம் அதன்படி தேர்தலிலும் வெற்றிபெற்றோம்.” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!