நாட்டில் முதல்முறையாக அரசுத் துறை நிறுவனங்களிலிருந்து ஒரே நாளில் 92,700 பேர் விருப்ப ஓய்வு!

நாட்டில் முதல்முறையாக ஒரே நாளில் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து 92,700 ஊழியர்கள், அதிகாரிகள் விருப்ப ஓய்வு பெற்றனர். பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள், ஊழியர்களை குறைப்பதன் மூலம் செலவை குறைக்கலாம் என எண்ணி, விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தன. இந்த திட்டத்தின் கீழ் 50 மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 78,569 பேரும், எம்டிஎன்எல் நிறுவனத்தில் 14,378 பேரும் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர். இதனையடுத்து இவர்கள் அனைவரும் இன்றுடன் விருப்ப ஓய்வு பெற்றனர். விருப்ப ஓய்வுக்குப் பிறகு பி.எஸ்.என்.எல்லில் 75, 217 பேர் மட்டுமே பணியில் தொடர்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!