சீனாவுக்கு முகக்கவசங்கள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை!

சீனாவில் ‘கொரோனா’ வைரஸ் வேகமாக பரவுவதால், முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு சீன நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனங்களை நாடின. மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியாளர்கள், பெரும்பாலும் முகக்கவசங்களை அதிகமாக தயாரிப்பது கிடையாது. தேவையை பொறுத்தே தயாரிக்கப்படுகிறது. சீனாவில் தேவை அதிகரிக்கவும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்தது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து அனைத்து வகையான முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அதிரடி தடை விதித்து உள்ளது.

வெளிநாடு வர்த்தக இயக்குனர் ஜெனரல் (டிஜிஎப்டி) அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காற்றில் பரவும் நுண்கிருமிகளிலிருந்து மக்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் (என் 95 முகக்கவசம் உள்பட), உடல் முழுவதும் மூடும் வகையிலான ஆடைகள் மற்றும் அனைத்து வகையான பாதுகாப்பு உபகரணங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த உத்தரவு, அடுத்தகட்ட உத்தரவு வரும்வரையில் அமலில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டிலும் தேவை அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!