இன்று கொழும்பு வருகிறார் ரஷ்ய இராணுவத் தளபதி!

ரஷ்ய இராணுவத் தளபதி உத்தியோகபூர்வ பயணமாக இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ரஷ்ய இராணுவத் தளபதி இன்று முற்பகல் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு வருகை தரவுள்ள ரஷ்ய இராணுவத்தளபதி பத்தரமுல்ல பகுதியில் அமைந்துள்ள யுத்தத்தில் உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்திற்கு செல்லவுள்ளதோடு ஶ்ரீ ஜயவர்தனபுர பகுதியில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!