சீனாவுக்கு அடிக்கு மேல் அடி! கொரோனாவைத் தொடர்ந்து பாரிய நிலநடுக்கம்

சீனாவில் – ஹுகயான் மாகாணத்தில் நேற்று இரவு திடீரென பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஹுகயான் மாகாணத்தில் உள்ள குயிங்பாஜியாங் பகுதியில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது.

10 வினாடிகளுக்கு அதிகமாக நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

பயணம் செய்தவர்கள் உடனடியாக வாகனத்தை விட்டு வெளியேறி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் தொடர்பில் தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

இந்நிலையில் மீட்பு படையினர் 150 பேர் 34 வாகனங்களில் அந்த பகுதியில் உள்ளனர்.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொடிய வைரஸ் உருவாகி மக்களை காவு கொள்ளும் இந்த நிலையில், அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமையானது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்கள் மனதில் ஒரு கலக்கம் ஏற்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!