மார்ச் முதல் ஆயிரம் ரூபா கிடைப்பது உறுதி – பிரதமர் சபையில் அறிவிப்பு.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

இதன்போது அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டவாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுமா, அதற்கான சூத்திரம் என்னவென்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

” ஆயிரம் ரூபாவை நாளாந்த சம்பளமாக வழங்குவதற்கு தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. எனவே, மார்ச் முதலாம் திகதி முதல் நிச்சயம் கிடைக்கும். தோட்டங்களை சுவீகரிக்க வேண்டிய தேவை ஏற்படாது.”

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!