ஜனாதிபதி கோத்தாவுடன் ரஷ்ய இராணுவத் தளபதி சந்திப்பு!

ரஷ்ய இராணுவத் தளபதி ஜெனரல் ஒலேக் சல்யுகோவ் நேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார். கடந்த 03ஆம் திகதி இலங்கைக்கு வந்த ரஷ்ய இராணுவத் தளபதி, 72வது தேசிய சுதந்திர தின விழாவில் விசேட விருந்தினராகக் கலந்து கொண்டார். ஜெனரல் ஒலேக் அவர்களுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!