சிறிலங்கா அதிபர் விமர்சித்தாலும் கூட்டு அரசு தொடரும் – ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விமர்சனங்களை முன்வைத்தாலும், கூட்டு அரசாங்கம் அதன் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்றுக்காலை நடந்த, இப்தார் காலை விருந்து நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன.

ஆனாலும், மக்களின் நலன் கருதி, தற்போதைய அரசாங்கம் , 2020 ஓகஸ்ட் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

கூட்டு அரசின் ஏனைய பங்காளிகளுடன் இணைந்து நாம் எமது கடமையை நிறைவு செய்வோம்.

நாடாளுமன்ற, அதிபர் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம், முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றும், அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!