நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு 6 மாத கால அவகாசம்!

உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டால் அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்பவர்களின் மனுவை ஏற்றுக் கொண்ட தேதியில் இருந்து ஆறுமாத காலத்திற்குள் 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. நிர்பயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளில் பவன்குப்தா தவிர இதர மூன்று பேர் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்த போதும் அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அவர்கள் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

காலத்தை வீணாக இழுத்தடித்து தண்டனையை ஒத்திப் போட குற்றவாளிகள் முயற்சிப்பதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி குற்றம் சாட்டினார். இந்நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் விசாரணைக்கு 6 மாத கால அவகாசம் விதித்து உச்சநீதிமன்றம் சில வழிகாட்டல்களை வகுத்துள்ளது. நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை விசாரணை நீதிமன்றம் அறிவிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!