அமெரிக்காவுடனான உறவுகளில் தேவையற்ற முரண்பாடு!

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை அமெரிக்கா – இலங்கை இடையிலான உறவுக்கில் தேவையற்ற முரண்பாட்டை ஏற்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்சுடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது இராணுவத் தளபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விடுக்கப்பட்ட தடை உத்தரவிற்கு கடுமையான ஆட்சேபனைகளையும் அமைச்சர் வெளியிட்டிருந்தார்.

மேலும், சவேந்திர சில்வாவின் சேவைக் காலம் மற்றும் அனுபவத்தினை கருத்திற்கொண்டு இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார் என்றும் அவருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் பற்றிய நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இலங்கையை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய மூத்த இராணுவ அதிகாரிகளில் சவேந்திர சில்வாவும் ஒருவர் என்பதையும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மீண்டும் ஒருமுறை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!