ஐதேக தலைமைக்கு ரணிலே பொருத்தமானவர் – ரோஹித

ஐக்கிய தேசிய கட்சிக்கு ரணிலே பொருத்தமான தலைவர் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் இன்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஐ.தே.க சின்னங்களால் பிளவுப்பட்டுள்ளது. நாட்டை ஆட்சி செய்வதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருத்தமற்றவர். ஆனால் ஐக்கியத் தேசியக் கட்சிக்கு அவரே பொருத்தமான தலைவர் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!