“1000 ரூபா நிச்­ச­ய­ம் வழங்­கப்­படும்”: அமைச்சர் ரமேஷ் பத்­தி­ரண உறுதி

பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­ப­ளத்­தை வழங்க எமது புதிய அர­சாங்­கத்தின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்கை வெற்­றி­ய­ளித்­துள்­ள­தோடு வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டதை போல் ஆயிரம் ரூபா சம்­பளம் நிச்­ச­ய­மாக பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் என்று பெருந்­தோட்ட பயிர்­ச்செய்கை விவ­சாய ஏற்­று­மதி அமைச்சர் ரமேஸ் பத்­தி­ரண தெரி­வித்தார்.

“மலை­யக மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டிய அனைத்து உரி­மை­க­ளையும் வழங்­கு­வ­தற்கு ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ச, பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ச ஆகியோர் தலை­மை­யி­லான அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது. இதற்­காக பெருந்­தோட்­டத்­துறை அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ஆறு­முகன் தொண்­ட­மா­னுடன் இணைந்து அதி­உச்ச ஒத்­து­ழைப்பை வழங்­குவேன் என்றும் அவர் குறிப்­பிட்டார். –

இந்­திய அர­சாங்­கத்தின் நிதி பங்­க­ளிப்­புடன் மலை­யக மக்­க­ளுக்­காக நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள 10 ஆயிரம் தனி வீட­மைப்பு வேலைத்­திட்­டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை காலை அட்டன் வெலி­ஓயா தோட்டம் மேற்­பி­ரிவில் நடை­பெற்­றது.

இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலை­வரும், சமூக வலு­வூட்டல் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு வச­திகள் அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான் தலை­மையில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் 50 வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்­காக அடிக்கல் நாட்டி வைக்­கப்­பட்­டது.

நிகழ்வில் பங்­கேற்று உரை­யாற்­றிய அமைச்சர் ரமேஷ் பத்­தி­ரண கூறி­ய­தா­வது,

நான் சிறு­வ­னாக இருக்­கும்­போது, மலை­யக மக்­களின் பொரு­ளா­தாரம் மற்றும் சமூக வாழ்க்கை நிலை மேம்­பாடு தொடர்பில் கதைக்­கும்­போது சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான் என்ற நபர் தவிர்க்­க­மு­டி­யாத இடத்­தைப்­பி­டிப்பார். எனவே, செள­மிய மூர்த்தி தொண்­டமான் மற்றும் மலை­யக மக்கள் தொடர்பில் எனது தந்­தை­யான அமரர் ரிச்சட் பத்­தி­ர­ணவின் மனதில் சிறந்த நன்­ம­திப்பு, கௌரவம் இருந்­தது.

அவர் கல்வி அமைச்­ச­ராக இருந்­த­போது இப்­ப­கு­தி­யி­லுள்ள மக்­களின் கல்வி மேம்­பாட்­டுக்­காக தன்னால் முடிந்த நட­வ­டிக்­கை­களை அன்று முன்­னெ­டுத்தார். இன்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ச அர­சாங்­கத்தில் பெருந்­தோட்­டத்­துறை அமைச்­ச­ராக இருக்கும் நான் உங்­க­ளுக்கு (மலை­யக மக்­க­ளுக்கு) வழங்­க­வேண்­டிய அனைத்­து­வித ஒத்­து­ழைப்­பு­க­ளையும் அமைச்சர் தொண்­ட­மா­னுடன் இணைந்து வழங்­குவேன் என்­பதை கூறிக்­கொள்ள விரும்­பு­கின்றேன்.

இந்த அர­சாங்கம் பத­வி­யேற்ற நாளி­லி­ருந்து இரவு, பகல் பாராது மலை­யக மக்­க­ளுக்­காக அமைச்சர் தொண்­டமான் தீவி­ர­மாக செயற்­பட்­டு­வ­ரு­கிறார். பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நாள் சம்­ப­ள­மாக ஆயிரம் ரூபாவை வழங்­கு­வது தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டினார். இதற்கு எமது அர­சாங்கம் சாத­க­மான பதிலை வழங்­கி­யது. நிச்­சயம் அந்த தொகை கிடைக்கும். அது­மட்­டு­மல்ல உங்­க­ளுக்கு கிடைக்­க­வேண்­டிய அனைத்து உரி­மை­க­ளையும் வழங்­கு­வ­தற்கு இந்த அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படும். அதற்­காக தொண்­டமான் சிறந்த தலை­மைத்­து­வத்தை மக்கள் சார்பில் வழங்­கி­வ­ரு­கிறார்.

அதே­வேளை, எமது நாட்டின் தேசிய பொரு­ளா­தா­ரத்தை சிறந்த இடத்­துக்கு கொண்டு வரு­வ­தற்கு கடந்த 100 வரு­டங்­க­ளாக பெருந்­தோட்ட மக்கள் பெரும் பங்­க­ளிப்பை வழங்­கி­வந்­துள்­ளனர். தேயிலை பொரு­ளா­தாரம் மூலம் நாட்­டுக்கு வரு­டாந்தம் 231 பில்­லியன் ரூபா கிடைக்­கின்­றது. அடுத்த ஐந்­தாண்டு காலப்­ப­கு­தியில் தொழி­லா­ளர்­களின் பங்­க­ளிப்­புடன் வரு­மா­னத்தை இரட்­டிப்­பாக்­கு­வ­தற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலாபம் இரட்டிப்பாகும்பட்சத்தின் அதன் நன்மையை கம்பனிகள் மட்டும் அனுபவிக்கமுடியாது. கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களுக்கே அதன் பிரதிபலன்கள் சென்றடையவேண்டும். எனவே, இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு இணைந்து செயற்படுவோம் என அழைப்பு விடுக்கின்றேன். ” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!