அமெரிக்காவைப் போல பயணத் தடை விதிக்குமா கனடா? – நாடாளுமன்றத்தில் கேள்வி

மக்கன்சி சட்டத்தை பயன்படுத்தி அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவும் போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் மீதான பயணத் தடையை விதிக்குமா என்று கனடியப் பாராளுமன்றத்தில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்னட் ஜெனூயிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கடந்த ஆண்டு யூன் மாதத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஆதரவளித்து, நிறைவேற்றிய தனிநபர் பிரேரணையான இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து ஐ.நா விசாரிக்க வேண்டும் என நிறைவேற்றி தீர்மானம் குறித்து லிபரல் அரசு மேற்கொண்டு என்ன செய்துள்ளது?< /p>

அத்துடன், மக்கன்சி சட்டத்தை பயன்படுத்தி அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவும் போர் குற்றங்கள் புரிந்தவர்கள் மீதான பயணத்தடையை விதிக்குமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு கனடிய பிரதமர், ஈரான் குறித்து தனது பதிலை அளித்து இலங்கை விடயத்தில் இருந்து நழுவிக் கொண்டார். ஈழத்தமிழர் ஒருவர் கனடிய பாராளுமன்றில், ஆளும் கட்சி உறுப்பினராக இருக்கின்ற நிலையில், அந்நாட்டு பிரதமரின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மியன்மரில் இன ஒடுக்கு முறைக்கு உள்ளான ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, கனடா அரசு இலங்கை தமிழர்கள் விடயத்தில் காட்டவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை குறித்தும், ஈழத்தமிழர்கள் குறித்தும், 24 மணி நேரத்திற்கு முன்னதாக எழுதிக் கொடுக்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு கனடா பிரதமர் இவ்வாறு பதிலளிக்காமல் நழுவிச் சென்றிருப்பது கனடா வாழ் ஈழத்தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!