குழந்தைகளை மறந்துவிட்டு வெறும் காரில் பள்ளிக்கூடத்துக்கு சென்ற தாய்!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், தன் குழந்தைகளை தினமும் அவர்களின் பள்ளிக்கூடத்திற்கு காரில் அழைத்து செல்வது வழக்கம். இது போலவே, சமீபத்தில் அவர் வழக்கம் போல் காரை எடுத்து கொண்டு பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். வெகு தூரம் சென்ற பிறகு, காரில் தன் குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகுதான் பிள்ளைகளை மறந்து வீட்டிலேயே விட்டு வெறும் காரை எடுத்து கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார்.

பின்னர் அவர் காரில் இருந்தபடியே தனது செயல் குறித்து பேசி அதை செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதில், சம்பவத்தை நினைத்து சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் பேசும் அந்த பெண், தன் குழந்தைகளை மறந்து வீட்டிலேயே விட்டு வந்து விட்டதாகவும், திரும்பி சென்று அவர்களை அழைத்து வர வேண்டும் என்றும் கூறினார். 46 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை, இதுவரை சுமார் 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!