ரவி கருணாநாயக்கவை கைது செய்ய உத்தரவு

த்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்படும், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களை, பிடியாணை பெற்று கைது செய்யுமாறு, சிறிலங்கா காவல்துறைக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவின் பதில் காவல்துறைமா அதிபருக்கு சட்டமா அதிபரால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், மற்றும் அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன, சரத் சந்ர ஆகியோரைக் கைது செய்வதற்கே நீதிமன்ற பிடியாணை பெறுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

2016இல் பிணை முறி ஏலத்தின்போது, சதி, குற்றவியல் முறைகேடு, மோசடி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!