ஐ.நா நிபுணரின் அறிக்கையை சிறிலங்கா நிராகரிப்பு

மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்த குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட ஆய்வுப் பயணத்தின் போது கண்டறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையை, சிறப்பு அறிக்கைய்யாளர் அகமட் ஷகீட் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்திருந்தார்.

இந்த அறிக்கையில், சிறிலங்காவின் நிலவரங்கள் குறித்து கவலை எழுப்பியிருந்ததுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தார்.

குறிப்பாக, கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், “சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகள் வன்முறைக் கும்பலுடன் கூட்டு சேர்ந்து செயற்பட்டதாகவும், வன்முறையைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தீவிர கவலை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கை தவறான தகவல்களை உள்ளடக்கியிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம், தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!