இலங்கையில் பிம்ஸ்ரெக் மாநாடு!

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) அமைப்பின் உச்சி மாநாடு இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளதாக பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் எம்.சஹிதுல் இஸ்லாம்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

பிம்ஸ்டெக் அமைப்பின்பொதுச் செயலாளர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

2018 – 2020 ஆம் ஆண்டுக்கான பிம்ஸ்டெக்கின் தலைமையை இலங்கை பெற்றுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ளது.

பிம்ஸ்டெக்கின் அதிகாரிகளின் கூட்டம் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை இலங்கையில் இடம்பெற்ற நிலையில் இதன்போது சாசனம் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்பட்டது.

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 7 தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளை கொண்ட பிராந்திய கூட்டணியாகும் .

தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!