சுமந்திரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள த.தே.கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை!!

கிழக்கு மாகாண வேட்பாளர் பட்டியலில் ஒரு பெண் வேட்பாளரை களமிறக்கிய சுமந்திரனின் தன்னிச்சையான செயல் ஒரு இழுக்கு என்றும், அது கட்சியின் பின்னடைவுக்கு வழிவகுக்கும் என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை குற்றம் சுமத்தியுள்ளது.

த.தே.கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை சார்பாக அதன் செயலாளர் வே.ஜெ.போஸ் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கு இன்று அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரித்தானியக் கிளையின் உள்ளக் குழுறல்’ என்ற தலைப்பில் அவர் அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில்,

அண்மையில் நடந்த நாடாளுமன்ற வேட்பாளர் தெரிவுகள், கிழக்கு மாகாண முக்கிய கட்சி ஆதவாளர்கள், உறுப்பினர்களைக் கலந்துகொள்ளாது ஒரு சில தனி நபர்களின் ஆதிக்கத்தின் பெயரில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறைபட்டுக்கொண்டனர்.

பல தகுதியான, தரமான பெண் வேட்பாளர்கள் இருந்தும் ஏற்கனவே 2010 இல் தமிழ் தேசியத்திற்கு எதிரான ஒரு சுயேட்சைக் குழுவின் ஆதரவில் போட்டியிட்டு 100 இற்கும் குறைவான வாக்குகளை மட்டும் பெற்ற ஒரு பெண்ணை, வெறும் தனிப்பட்ட சிபாரிசில் தெரிவுசெய்தது ஒரு இழுக்கு என்றும், இது கட்சியின் கட்சியின் பின்னடைவுக்கு வழிவகுக்கும் என்றும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது

வேட்பாளர் தெரிவில் சனநாயக நடைமுறைகள் பின்பற்றப்படாமல், ஒரு சிலரின் செல்வாக்கில் முடிவுகள் எடுக்கப்படுவதானது தலைமைப்பீடத்தின் மீது அதிருப்தியையும், அதன் இயலாமையையும் எடுத்துக்காட்டுகின்றது.. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக தந்தை செல்வா அவர்களால் பல தலைவர்களை உயிர் பலிகொடுத்து தியாகத்தின் ஊடாக வளர்க்கப்பட்ட கட்சி ஒன்று பல்வேறு விமர்சனங்களுக்கும், ஒரு சிலரின் வழிகாட்டல்களுக்கும், உட்பட்டு பாரிய பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!