தாய், மகள் உடல் கருகி உயிரிழப்பு: வீட்டில் வெடி தயாரித்தபோது நேர்ந்த விபரீதம்!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சட்டவிரோதமாக வீட்டில் வெடிதயாரித்தபோது திடீரென வெடித்து சிதறியதில் தாயும், மகளும் உடல் கருகி பலியானார்கள். வடகரையைச்சேர்ந்த கணவரை இழந்தவரான பாண்டியம்மாள் அவரது மகள் நிவிதா ஆகியோர் திருவிழா மற்றும் விசேஷங்களுக்கு வெடி தயாரித்து விற்பனை செய்து வந்தனர். இன்று வழக்கம்போல் வெடி தயாரித்தபோது திடீரென அவை பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறியதில் பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார்.

உயிருக்கு போராடிய நிவிதாவை போலீசார் மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் அந்த வீடும் பக்கத்தில் உள்ள இரு வீடுகளும் இடிந்து சேதம் அடைந்தன. விசாரணையில் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக வெடிதயாரித்தது தெரியவந்தது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!