ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விஜித் விஜயமுனி சொய்சா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) இரவு, கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த துணைத் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஒழுங்குவிதிகளை மீறினார்கள் என விஜித் விஜயமுனி சொய்சா, மற்றும் சில உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!