கொரோனா அச்சம் – மூன்று நாட்களுக்கு விடுமுறை நீடிப்பு!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக நடவடிக்கையாக, அரச, தனியார் நிறுவனங்களுக்கு நேற்று வழங்கப்பட்ட விடுமுறை மேலும் மூன்று நாள்களுக்குள் நீடிக்கப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை வரை பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய சேவைகளுக்கே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!