பிரித்தானியாவில் கொரோனா அறிகுறியுடன் காணப்பட்ட குழந்தை: தவறான மாத்திரை உட்கொண்டதால் ஏற்பட்ட விபரீதம்!

கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட ஒரு குழந்தைக்கு கொடுக்கப்பட்ட ஒரு மாத்திரை நிலைமையை மேலும் மோசமாக்கியதால், அந்த மாத்திரையை பயன்படுத்தவேண்டாம் என எச்சரித்துள்ளார் அந்த குழந்தையின் தந்தை. பிரித்தானியாவில் கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுள்ள Amelia Milner (4) என்ற குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால், அவளுக்கு ibuprofen என்ற மாத்திரையைக் கொடுத்துள்ளனர் அவளது பெற்றோர். ஆனால் காய்ச்சல் குறைவதற்கு பதிலாக, அவளது நிலைமை மோசமாகியிருக்கிறது. அவளது காய்ச்சல் அதிகமானதோடு, அவளது உடல் நடுக்கம் கண்டு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாந்தியும் எடுத்திருக்கிறாள் Amelia.

கண்கள் திறக்க இயலாமல் போராடிய குழந்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்த Ameliaவின் பெற்றோர், உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்துள்ளனர். விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் அவளுக்கு சிகிச்சை அளித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். பேஸ்புக்கில் இடுகை ஒன்றை பதிவேற்றம் செய்துள்ள Ameliaவின் தந்தை, குழந்தைகள் இருப்பவர்கள் கவனத்திற்கு, உங்கள் குழந்தைக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் தயவு செய்து ibuprofen கொடுக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்புதான் மருத்துவரும், பிரான்ஸ் சுகாதார அமைச்சருமான livier Veran, கொரோனா தொற்று இருப்பவர்களின் நிலைமையை மோசமாக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. Ibuprofen, cortisone போன்ற ஸ்டீராய்டு அல்லாத வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும் மருந்துகள் கொரோனாவின் தாக்கத்தை அதிகப்படுத்தும் என்று கூறியிருந்ததோடு, பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் அவர் ஆலோசனை கூறியிருந்தார். சுவிஸ் அதிகாரிகளும் Ibuprofen, cortisone போன்ற ஸ்டீராய்டு அல்லாத வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும் மருந்துகள் நுரையீரல் தொற்றை அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!