வடகொரிய ஜனாதிபதியை வெள்ளை மாளிகைக்கு அழைப்பேன்- டிரம்ப்

சிங்கப்பூர் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தால் வடகொரிய ஜனாதிபதியை வெள்ளை மாளிகைக்கு அழைப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அனைத்தும் சிறப்பாக நடைபெற்றால் நான் நிச்சயமாக வடகொரிய ஜனாதிபதியை வெள்ளை மாளிகைக்கு அழைப்பேன்,அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நான் கருதுகின்றேன் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எனது அழைப்பை வடகொரிய ஜனாதிபதி சாதகமாக எடுப்பார் என கருதுகின்றேன், எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும் வடகொரியா அணுவாயுதங்களை கைவிடச்செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடையும் என கருதினால் நான் பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேற தயங்க மாட்டேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நான் ஏற்கனவே ஒரு முறை வடகொரிய ஜனாதிபதியுடான சந்திப்பை இரத்துச்செய்துள்ளேன், எனினும் இம்முறை அதற்கான தேவை உருவாகாது என கருதுகின்றேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா ஜனாதிபதி தனது மக்களிற்கும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் மிகப்பெரிய விடயமாக அமையப்போகின்ற ஒன்றை சாதிக்க விரும்புகின்றார் என கருதுகின்றேன் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!