மத்தலவை விட்டு கடைசி விமான நிறுவனமும் வெளியேறுகிறது

சிறிலங்காவின் இண்டாவது அனைத்துலக விமான நிலையமான, மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்துக்கான, சேவைகளை மேற்கொண்டு வந்த கடைசி விமான நிறுவனமும் அதனைக் கைவிட்டுள்ளது.

மத்தல விமான நிலையத்துக்கு பிளை டுபாய் நிறுவனம் மாத்திரமே வாரத்தில் நான்கு சேவையில் ஈடுபட்டு வந்தது. அந்த நிறுவனமும், சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

இதுபற்றி மத்தல விமான நிலைய முகாமைத்துவத்துக்கு ஏற்கனவே பிளை டுபாய் நிறுவனம் அறிவித்துள்ளது என்று, சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்தார்.

போதிய பயணிகள் இல்லாமையால், வருமானம் கிடைக்கவில்லை என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விமானங்களில் பறவைகள் அடிக்கடி மோதுவதாகவும் முறையிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கடைசி விமான நிறுவனமும் வெளியேறியதால், மத்தல விமான நிலையம் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!