சீனாவில் இனங்காணப்பட்ட உலகின் முதலாவது கொரோனா நோயாளி – அவர் கூறும் கொரோனா பின்னணி

சீனாவை சேர்ந்த 57 வயது பெண் ஒருவரே முதலாவது கொரோனா நோயாளி என இனங்காணப்பட்டுள்ளது.

வுஹான் மாமிச உணவு சந்தையில் இறால் வியாபரம் செய்யும் Wei Guixian என்ற பெண் படந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்.

எனினும் எப்போதும் வரும் காய்ச்சல் தான் என இவர் மருத்துவமனைக்கு சென்று இருமல் மற்றும் காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.

அந்த காய்ச்சலுக்கு பின்னர் தமக்கு கடுமையான உடல் சோர்வு இருந்ததாகவும், ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட காய்ச்சலின் போது இருந்த அளவுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் காய்ச்சல் குணமாகத காரணத்தால் அவர் 16 ஆம் திகதி வுஹான் சிற்றி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

பரிசோனையில், இவருக்கு ஏற்பட்டுள்ள நோய் மிகவும் ஆபத்தானது எனவும், வுஹான் மாமிச சந்தையில் இருந்து இதே அறிகுறிகளுடன் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து டிசம்பர் இறுதியில் வுஹான் சிற்றி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் Wei அனுமதிக்கப்பட்டார்.

ஜனவரியில் பூரண குணமடைந்த Wei, தாம் பாதிக்கப்பட்டது கொரோனா வைரஸ் எனவும், வுஹான் சந்தையில் அமைந்துள்ள பொது கழிவறையில் இருந்து பரவி இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வுஹான் நகராட்சி சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட முதல் 27 நோயாளிகளில் 24 பேர் வுஹான் சந்தையில் தொடர்புடையவர்கள் என சுட்டிக்காட்டியது.

Wei மட்டுமின்றி அவரது மகள் உள்ளிட்ட குடும்பத்தினர்களும் இந்த விசித்திர காய்ச்சலுக்கு இலக்கானார்கள்.

சீனத்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், இந்த கய்ச்சல் சீனாவுடன் கட்டுக்குள் வந்திருக்கும் எனவும், உலக அளவில் பரவ வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் சீனத்து தனியார் மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்ட தகவலில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கான நபர் தொடர்பில் டிசம்பர் 1 ஆம் திகதியே அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு வுஹான் சந்தையுடன் எந்த தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிடுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!