இன்னும் பலரை விடுவிப்பார் ஜனாதிபதி!

மிருசுவில் பகுதியில் எட்டு பொதுமக்களை கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி விடுதலை செய்யப்பட்டதற்கு சர்வதேச அறங்கூறுநர் ஆணைக்குழு கண்டித்துள்ளது.

சுனில் ரத்நாயக்க என்ற இந்த இராணுவ உறுப்பினர் 2000ம் ஆண்டு மிருசுவிலில் மூன்று சிறுவர்கள் உட்பட்ட 8 பொதுமக்களை கொலை செய்தமைக்காக 2015ம் ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் இவரை விடுதலை செய்தமையானது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல், அர்ப்பணிப்பு தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சர்வதேச அறங்கூறுநர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இத்தகைய மன்னிப்பு தண்டனை மற்றும் நீதிக்கான அணுகல் தொடர்பான சர்வதேச தரங்களுடன் பொருந்தாது, அத்துடன் மேலும் இராணுவத்துக்கு எந்தவொரு பொறுப்புக்கூறலிலிருந்தும், மிகக் கொடூரமான குற்றங்களுக்கு கூட விலக்கு அளிக்கப்படுகிறது என்ற நன்கு நிறுவப்பட்ட பொதுக் கருத்தை வலுப்படுத்துகிறது” என்றும் சர்வதேச அறங்கூறுநர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொய்யான குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறைகளில் உள்ள போர் வீரர்களை விடுதலை செய்வதாக ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் இன்னும் பலர் விடுதலை செய்யப்படலாம் என்றும் அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!