பல்கலைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

2020 பல்கலைக்கழக அனுமதிக்கான பதிவை எதிர்பார்த்துள்ள எந்தவொரு மாணவரும் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கால எல்லையை மேலும் நீடிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ ஊடாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில்

2020ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் பதிவு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லையை மேலும் 2 வாரங்களினால் நீடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, மாணவர்களைப் பதிவு செய்வதற்கான கால எல்லை மார்ச் மாதம் 26ஆம் திகதி வரையில் செல்லுபடியானதாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நாட்டின் நிலவும் நிலமையின் அடிப்படையில் இந்த கால எல்லை மேலும் 2 வாரங்களுக்கு அதாவது ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!