காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு திருகோணமலையில்

காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு திருகோணமலையில் எதிர்வரும் 13ஆம் நாள் நடைபெறவுள்ளது.

காணாமல் போனோருக்கான பணியகம், பிரதேச வாரியாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து வருகிறது.

ஏற்கனவே, மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் அமர்வுகளை நடத்திய காணாமல் போனோருக்கான பணியகம், எதிர்வரும் 13ஆம் நாள் திருகோணமலையில் அடுத்த அமர்வை நடத்தவுள்ளது.

திருகோணமலை கலாசார மண்டபத்தில் இந்த அமர்வு இடம்பெறவுள்ளதாகவும், இதில் பணியகத்தில் 7 ஆணையாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!