பதுளையில் நான்கு நகரங்களை முடக்க உத்தரவு!

பதுளை மாவட்டத்தில் இன்று ஊடரங்கு உத்தரவை தளர்த்தப்பட்டுள்ள போதிலும், வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை, தியத்தலாவை ஆகிய நான்கு நகரங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு குறித்த பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பண்டாரவளை பொலிஸ் அதிகாரி அதுல டீ சில்வா தெரிவித்துள்ளார்.

அதிகளவு மக்கள் கூடுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!