கொரோனா தொற்று: சாத்தியமான தடுப்பூசியை தயாரித்தது ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்!

உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 37,815 பேரை கொரோனா வைரஸ் பலியாக்கியிருக்கிறது. அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் 1, 65 ஆயிரம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இரவு நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். பலியானோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. 102 பேர் குணமடைந்துள்ளனர்.இன்றைய நிலவரப்படி 1284 பேர்கொ ரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ரஷ்ய அரசாங்கமும் கொரோனா வைரசிற்கான தடுப்பூசி தயாரிப்பதில் மும்முரமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சீனா, தென் கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அமெரிக்கா தனது தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் தடுப்பூசி தயாரிக்கும் திட்டமும் சோதனையில் உள்ளது. ரஷ்யா தனது தடுப்பூசியை விலங்குகள் மீது பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது.

உலகின் அனைத்து பெரிய நிறுவனங்களும் கொரோனா வைரசை எதிர்த்துப் போராடத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் அமெரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் பெயர் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசியை தங்கள் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இந்த தடுப்பூசியின் சோதனை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், பயோமெடிக்கல் அட்வான்ஸ் ரிசர்ச் 13 நிமிடங்களாக்அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (BARDA) உடன் இணைந்து, ஜனவரி 2020 முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்த கொடிய வைரசை எதிர்த்துப் போராடுவதற்கு நிறுவனம் ஒரு தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. சோதனை முடிந்தவுடன்,100 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என்று நிறுவனம் கூறி உள்ளது.

“உலகம் ஒரு அவசர பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது, மேலும் கொரோனா தடுப்பூசி உலகளவில் சீக்கிரம் கிடைக்கக்கூடியதாகவும், மலிவு விலையிலும் கிடைக்க எங்கள் பங்கைச் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று ஐரிஷ் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது. மேலும் மற்றொரு அமெரிக்க நிறுவனமான அபோட் லேபரேட்டரீஸ் விரைவான சோதனையைத் தொடங்குவதற்கான தனது திட்டம் குறித்து அறிவித்துள்ளது கொரோனா வைரஸ் அதன் புதிய கண்டறியும் சோதனை,கருவி கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் என்று அபோட் கூறியுள்ளது. சோதனை முடிவு 5 நிமிடங்களில் இருந்து 13 நிமிடங்கள் வரை குறையும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!