கொரோனா சிகிச்சையின் போது மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்தால் 1 கோடி வழங்கப்படும் – அரசு அறிவிப்பு!

இந்தியாவில் டெல்லி அரசு கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் சுகாதாரப்பணியாளர்கள் யாராக இருந்தாலும் எதிர்பார்தவிதமாக உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் தற்போது வரை 1,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 45 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மகாராஷ்ட்டிரா, கேரளா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த வைரஸ் எளிதாக மனிதர்களிடமிருந்து பரவுவதால், மருத்துவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் உயிரை பணையம் வைத்து தான் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில்,நாட்டை பாதுகாக்கும் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு டெல்லி அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்றைய சூழலில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் சுகாதாரப்பணியாளர்கள் யாராக இருந்தாலும் மருத்துவரோ, செவிலியரோ, சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளும் நபர்களோ எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பங்களுக்கு டெல்லி அரசு சார்பில் 1 கோடி ரூபாய் வழங்கப்படும். அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் என எந்தப் பாகுபாடும் கிடையாது. கொரோனா வைரஸுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ள டெல்லி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் உரையாடினேன்.

அவர்களின் தைரியத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் நான் தலைவணங்குகிறேன். அவர்களுக்குத் தேவையான முழு ஆதரவையும் அரசு அளிக்கும். அவர்கள் எங்களிடம் சில பரிந்துரைகளைத் தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் அவற்றை நாங்கள் செயல்படுத்துவோம். மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி யாருக்காவது எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்தை அரசு கவனித்துக்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!