காலஅவகாசத்தை பெற்றுத் தரக் கோருகிறார் ஜனாதிபதி!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள வளர்முக நாடுகளுக்கு உலக வங்கி உட்பட்ட நிதி நிறுவனங்களிடம் இருந்து கால அவகாசத்தை பெற்றுத்தர வேண்டும் என்று இலங்கை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேற்றுமுன்தினம் தம்முடன் தொடர்பு கொண்ட உலக சுகாதார மையத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் இந்த கோரிக்கையை விடுத்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரத்தில் தாக்கம் அடைந்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு கடன் செலுத்தும் கால அவகாசத்தை சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்கவேண்டும் என்பதை உலக சுகாதார மையம் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!