பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை!

பிறக்கவிருக்கும் தமிழ் சிஙகள புதுவருடத்தில் பொறுப்புடன் செயற்பட்டு, நாடு முகங்கொடுத்துள்ள அபாயத்தை குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார் .

குறிப்பாக புதுவருட நிகழ்வுகளை வீட்டிலிருந்தே மேற்கொள்ளுமாறும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.

பொறுப்புடன் ஒவ்வொருவரும் செயல்படும் பட்சத்தில் கொரொனா வைரசு பிடியில் இருந்து விடுபட்டு பிரச்சினை இல்லாமல் எதிர்காலத்தில் பயணிக்க முடியும். இல்லையேல், பல இக்கட்டான நிலைமைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். இந்த நிலையில், நாட்டின் எதிர்காலம் தொடர்பில் மிக முக்கிய பொறுப்பு பொதுமக்களிடம் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!