ஊரடங்கின் போது இரட்டிப்பான கொரோனா பாதிப்பு – குழப்பத்தில் இந்தியா!

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே தமிழகம், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில், இந்த ஊரடங்கை வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்து அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் உத்தரவிட்டனர். நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை அனைத்து மாநிலங்களும் கேட்டுக் கொண்டன. இதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு தழுவிய ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டிப்பதாக அறிவித்தார்.

ஊரடங்கு தொடர்ந்து அறிவிக்கப்பட்டாலும் ஊரடங்கால் என்ன நடக்கிறது?கடந்த 21 நாட்கள் ஊரடங்கு கொரோனா பாதிப்பில் இந்தியாவில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா? என கேள்வி எழுகின்றன. வெவ்வேறு ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதாகக் கூறுகின்றன.

ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தின் ஷாமிகா ரவி கூறியதாவது:- கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது வளர்ச்சி விகிதம் ஒரு நிலையான சரிவைக் காட்டுகிறது – ஏப்ரல் 6 முதல் ஊரடங்கிற்கு சு.மார் 2 வாரங்களுக்குப் பிறகு. ஒவ்வொரு 7 நாட்களுக்கும் செயலில் உள்ள பாதிப்புகள் இரட்டிப்பாகின்றன.

ஏப்ரல் 6 ஆம் தேதி, இந்தியாவில் 4778 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக இந்தியா கொரோனா (கோவிட் -19) கண்காணிப்பு தெரிவித்துள்ளது. பாதிப்புகள் ஏப்ரல் 13 அன்று 10,455 ஆக இரு மடங்காக அதிகரித்தன, இது செயலில் உள்ள வழக்குகள் இப்போது ஒவ்வொரு 7 நாட்களுக்கும் இரட்டிப்பாகி வருவதாகக் கூறுகின்றன.

இதற்கு முன்பு, ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் வழக்குகள் இரட்டிப்பாகின. ஏப்ரல் 1 ஆம் தேதி இந்தியாவில் 2059 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இந்த எண்ணிக்கை ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் இரு மடங்காக அதிகரித்து 4289 பாதிப்புகளானது. பாதிப்புகளின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டிருக்கலாம், ஏப்ரல் 6 முதல் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என கூறுகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!