சுங்க அதிகாரி உள்ளிட்ட 6 பேர் 24 மணி நேரத்தில் கைது!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் சகோதரர் உள்ளிட்ட ஆறு பேர் நேற்று முன்தினமும், நேற்றும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சுங்க அதிகாரி ஒருவரும், ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரும் உள்ளடங்குவதாக, பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களிடம், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் சிறப்பு அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!