தீவிரப்படுத்தப்படும் கொரோனா தடுப்பு பணி: மே 3 வரை ஊரடங்கு தளர்வு இல்லை!

கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், எந்தெந்த பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தலாம் என ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு தளர்த்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘கொரோனா மேலும் பரவுவதை தடுப்பதற்கு கடும் நடவடிக்கையை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டி உள்ளதால் ஊரடங்கு மே 3ம்தேதி வரை தளர்வு இல்லை. அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைகளுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். நோய்த்தொற்று குறைந்தால், வல்லுனர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும்’ என தமிழக அரசு கூறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!