கொரோனா அச்சத்திலும் மீண்டும் மக்களுக்காக சேவையை ஆரம்பித்துள்ள ஆணைக்குழு!

கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக சேவையை இடை நிறுத்தியிருந்த மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கஸ்ரமான சூழ்நிலைகளிலும் மக்களுடைய மனித உரிமை மீறல் தொடர்பான பிரசைனைகளை தீர்த்துவைப்பதற்காக மேற்படி மனித உரிமை ஆணைகுழு உபகாரியாலயம் தமது சேவையை ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் உப காரியாலயத்திற்கு என முறைப்பாடுகள் செய்ய வரும் மக்கள் அநாவசியமான வகையில் அதிகளவானவர்களை அழைத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் முறைப்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மாத்திரமே வருகை தரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் காரியாலயத்திற்கு வருகை தருபவர்கள் அரசினுடைய அறிவுத்தலை பின்பற்றறி சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் முக கவசங்கள் அணிந்துவருவது கட்டயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசியமற்ற சந்தர்ப்பங்களில் இயலுமானவரை தங்களுடைய முறைப்பாடுகளை 0233123906 என்ற தொலைபேசி எண்ணின் ஊடாக அழைத்து பதிவு செய்ய முடியும் எனவும், அதே நேரத்தில் hrcmannarsub@gmail.com வழியாகவும் தங்களுடைய முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் மன்னார் மாவட்ட உப காரியாலயத்தின் பொறுப்பதிகாரி சட்டத்தரணி வசந்தராஜாவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!