அலரி மாளிகை ஊழியர்களுக்கு திடீர் கொரோனா சோதனை!

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் பணிபுரியும் 240 ஊழியர்களுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் போன்று தென்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை அவசரமாக முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும் குறித்த நபருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளமை இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!